*கோவையில் கலெக்டர் ஆய்வு*
*பெரியநாயக்கன்பாளையத்தில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல்*
*கோவை, அக்.21:*
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் திரு. பவன் குமார்.க.இ.ஆ.ப அவர்கள் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட *7-வது வார்டு 5 முக்கு விவேகானந்தபுரம்* பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், மழைநீர் வடிந்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சி மண்டல துணை இயக்குனர், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
*புகைப்பட குறிப்பு:* பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம் பகுதியில் மழை நீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சி
யர் பவன் குமார்.


கருத்துரையிடுக