சாலை ஆக்கிரமிப்பு புகார்!


*அரசுக்கு சொந்தமான 30 அடி சாலையை தனியார் ஆக்கிரமிப்பு - மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் புகார்*



*கோவை, செப்.27:*



கோவை மாவட்டம் அனுப்பர்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 30 அடி பொது சாலையை தனிநபர்கள் மோசடி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாகவும், அதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த பா.வெங்கடேசன் என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.

*அவரது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:*

கோவை மாவட்டம் அனுப்பர்பாளையம் கிராமம், வார்டு 1, பிளாக் 30 (தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதி) -ல் பழைய க.ச.எண் 18-க்கு உட்பட்ட 30 அடி தென்வடல் ரோடு (தற்போதைய TSLR No.1363) என்பது அரசுக்கு சொந்தமான பொது சாலையாகும்.

இந்த சாலையை மேக்னம் பவுண்டேசன் மற்றும் மாலதி பாண்டுரங்கன் ஆகியோர் மோசடி ஆவணங்கள் மூலம் தனிநபர் பட்டாவாக மாற்றி அபகரித்து விட்டனர். இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நடமாட முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே அரசு சாலையை ஆக்கிரமித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட 30 அடி சாலையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை