கபடி போட்டியில் கலாட்டா!

 *கபடி போட்டி கலாட்டா.. கோவையில் பரபரப்பு!*

*வீரர்கள் கொந்தளிப்பு - நிர்வாகிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு*

*கோவை, அக்.25:*



கோவை மாவட்ட அளவிலான கபடி போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

போட்டியை வெறும் 2 நிமிடத்தில் நடத்தி முடித்ததாக நிர்வாகிகள் மீது கபடி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

* குற்றச்சாட்டு என்ன?*

18 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த கபடி போட்டியில் 85 கிலோ எடை கொண்ட வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் எடை அதிகம் உள்ள வீரர்களையும், மாவட்ட அளவில் தகுதி இல்லாத வீரர்களையும் கலந்து கொள்ள வைத்ததாக வீரர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் ஆளுக்கு ஒரு ரெய்டு என்ற முறையில் வெறும் 2 நிமிடத்தில் போட்டியை முடித்ததாகவும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பகிரங்க குற்றம் சாட்டினர்.

*பொதுச்செயலாளர் சபியுல்லா விளக்கம்:*

இது குறித்து மாவட்ட கபடி சங்க பொதுச்செயலாளர் *சபியுல்லா* கூறியதாவது:

"முறைப்படி காவல்துறை அனுமதியுடன் தான் போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்த விடாமல் சிலர் தடுக்க முற்பட்டனர். விதிமுறைகளின்படியே போட்டி நடத்தப்பட்டது" என குற்றச்சாட்டை மறுத்தார்.

*கவியரசன் பரபரப்பு பேட்டி:*

இது தொடர்பாக கபடி கபடி உரிமைக் குழு சார்பில் கவியரசன் கூறுகையில், "சபியுல்லாவின் இல்ல திருமணத்திற்காக 2 நாள் போட்டியை ஒத்திவைத்தனர். மொத்தம் 40 அணிகள் தான் உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அணிகளிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக முடிவுகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து காவல்துறையிடம் முறையிட்டும் பலனில்லை. முறையான தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.

இந்த முறைகேடு குற்றச்சாட்டால் நேரு விளையாட்டு அரங்கில் சிறிது நேரம் பரபரப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது.

Post a Comment

புதியது பழையவை