*பெரியநாயக்கன்பாளையத்தில் கடன் மோசடி - 100 பெண்களை அடைத்து வைத்து மிரட்டல் - கனரா வங்கி மற்றும் NGO நிர்வாகிகள் மீது புகார்*
*கோவை, அக்.26:*
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கனரா வங்கி மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்ததாக கனரா வங்கி மற்றும் NGO நிர்வாகிகள் மீது அம்பேத்கர் மக்கள் விடுதலைக் கழகம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது.
*கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:*
கனரா வங்கி மூலம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்களை அழைத்து வந்து, ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் ரூ.2 லட்சத்திற்கு பதில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்த மோசடிக்கு கனரா வங்கி மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளார். NGO விஜய் மற்றும் NGO ஜெயந்தி ஆகிய இருவரும் இந்த கும்பலின் தலைவர்களாக செயல்படுகின்றனர். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் ரூ.2 லட்சத்தை கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர்.
எனவே 100 பெண்களை அறையில் அடைத்து மிரட்டி பண மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பேத்கர் மக்கள் விடுதலைக் கழக தலைவர் C.M.V.ரங்கநாதன் தலைமையில் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக