Breaking news

 பெரியார் அறிவுலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை:  

த.வெ.க வின் கொள்கை தலைவரா? தந்தை பெரியார்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்!


கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ.301.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழக முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். அத்துடன் தந்தை பெரியாரின் சிலையையும் திறந்து வைத்தார். நூலகம், அறிவியல் மையம், மின்னணு நூலகம், கோளரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மையம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பெரியார் அறிவுலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து மூடியிருப்பது கண்டனத்திற்குரியது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கோவை மாவட்டக் குழு தெரிவித்துள்ளது.


அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு நூலக வசதிகள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக, பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு இத்தகைய பொது நூலகங்கள் பெரும் உதவியாக உள்ளன. விடுமுறை நாட்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரியார் அறிவுலகம் தொடர்ந்து பயன்பட வேண்டும்.


 தமிழக வெற்றிக் கழகமும் தந்தை பெரியாரைக் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக முன்னிறுத்தி வரும் நிலையில், பெரியார் பெயரில் அமைந்துள்ள அறிவுலகத்திற்கு  பண்டிகைகளைக் காரணம் காட்டி விடுமுறை அளித்திருப்பது அரசின் கொள்கை நிலைப்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.


எனவே, பெரியார் அறிவுலகத்தின் விடுமுறை நடைமுறையைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ராஜா மாவட்ட தலைவர், தினேஷ் ராஜா மாவட்ட செயலாளர் DYFI கோவை மாவட்டக் குழு வலியுறுத்தி உள்ளது.



Post a Comment

புதியது பழையவை